மனித புதைகுழி விவகாரம் : இறுதித் தீர்மானம் இன்று

மன்னார் மனித புதை குழியில்  அகழ்வு பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதா? அல்லது முற்றாக நிறுத்துவதா? என்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடல் மன்னார் நீதவான் டீ.சரவணராஜா தலைமையில் இடம்பெறவுள்ளது. 

மன்னார் மனித புதைகுழியில் அகழ்வு பணிகளை மேற்கொண்ட விஷேட மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

இதுதவிர, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் பணியாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த பங்கேற்கவுள்ளனர்.

மனித புதைக்குழியிலிருந்து இதுவரை 342 மனித எச்சங்கள் மீட்கப்பட்டதுடன் அவற்றுள் 330 மனித எச்சங்கள் மன்னார் நீதிமன்றத்தின் விஷேட காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment