குப்பை கொட்டுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

புத்தளம் அருவக்காடு பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிராக எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்கிழமை கொழும்பு காலிமுகத்திடலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும், விழிப்புணர்வுக் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பபைகளைக் கொட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்ட புத்தளம் அருவக்காடு சேராக்குளி பகுதியில் குப்பைகளை இம்மாதம் 15 ஆம் திகதி முதல் கொட்டுமாறு பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் புத்தளம், சிலாபம் நகரசபைகளுக்கும், புத்தளம், கற்பிட்டி, வனாத்தவில்லு மற்றும் கருவலகஸ்வௌ பிரதேசசபைகளுக்கும் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி கடிதம் மூலம் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி புத்தளத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன், புத்தளம் - கொழும்பு முகத்திடலில் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றிருந்தது. 
அப்போராட்டத்தில் புத்தளம், கரைத்தீவு, கற்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டிருந்த போதிலும், அவர்கள் எதிர்பார்த்தபடி தீர்வு வழங்கப்படாத நிலையிலேயே எதிர்வரும் செவ்வாய்கிழமை மீண்டும் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment