பீட்டாவிற்கு அனுப்பப்பட்டவை மன்னார் எலும்புகள் தானா???

மன்னார் மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு மாதிரிகளின் கார்பன் பரிசோதனை அறிக்கையில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.


மன்னார்  சதொச வளாகத்தில்  மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு மாதிரிகள் அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாநிலத்தில் உள்ள பீட்டா நிறுவனத்துக்கு கார்பன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

கடந்த 5 ஆம் திகதி சம்பவம் தொடர்பிலான அறிக்கை மன்னார்  நீதிமன்றுக்குக் கிடைத்தது. எனினும் அந்த அறிக்கை மார்ச் 7 ஆம் திகதி நீதிமன்றில் இருந்து பெறப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் குறித்த என்புகள் 1499 –1719 ஆம் ஆண்டுகளுக்கு உட்பட்டவை என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் செய்தி வெளியாகியிருந்தது.

இது சமூகவியலாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. பலரும் விடயம் தொடர்பில் சர்ச்சையான கருத்துக்களையும் கூறுகின்றனர்.

இந்த நிலையிலையே பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் சிவகரன் இதனைத் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment