விமானங்களை தாக்கும் ஆயுதங்களுடன் அதிகாரி கைது !!!

விமானங்களைத் தாக்கி அழிக்க துப்பாக்கிகள் மற்றும் அதற்குரிய  சன்னங்கள் மற்றும்  ரவைகளுடன் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவரிடமிருந்து விமானங்களை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் அதற்குரிய 73 சன்னங்கள் உள்ளிட்ட 5.81 மில்லி மீட்டர்களைக் கொண்ட 273 ரவைகள் ஆகியவை பொலிஸாரால் மீட்கப்பட்டன.

பதுளை – ரிதிமாலியத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் நேற்று ரிதிமாலியத்தை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குருவிதென்னை என்ற இடத்தில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொதியொன்றை பரிசோதனை செய்தனர்  அப்போது, வெடிப்பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன. 

மீட்கப்பட்ட பொருள்களின் உரிமையாளரென்று கருதப்படும் இராணுவ உயர் அதிகாரியையும் பொலிஸார் கைது செய்தனர். 

இவர் உடனடியாக மகியங்கனை மாவட்ட நீதிபதி ஏ.ஏ. லக்சான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். நீதிபதி, அந் இராணுவ உயர் அதிகாரியைஎதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மன்னார் பகுதியின் பெரியமடு இராணுவ முகாமில் சேவையாற்றும் 35 வயது அதிகாரி ஒருவரே  இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இவர் விடுமுறையில் வீடு வந்து தங்கியிருந்தவரென்று ஆரம்ப விசாரணையின் போது தெரிய வந்துள்ளதாக ரிதிமாலியத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரொசான் எஸ். பந்துசேன தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.


Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment