முதலமைச்சர் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் அரசு மருத்துவமனைகளில்  கட்டாயமாக சிகிச்சை பெற வேண்டும் என்று சட்டம் கொண்டு வருவோம், ஒரு பைசா லஞ்சம் ஊழல் இருந்தால் விஷ ஊசி போட்டு கொன்று விடுவோம். இவ்வாறு ஆவேசமாகத் தெரிவித்தார்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சீமான் கடலூர் மாவட்டம் வடலூரில்  தேர்தல் வாக்குறுதிகளை கூறும் தருணத்திலேயே சீமான் இதனைத் தெரிவித்தார் அவர் தெரிவித்ததாவது,
முதல் திட்டமாக நீர் வளம் பெருக திட்டம் செயல்படுத்தப்படும். வேளாண்மையை தேசிய தொழிலாக அரசுப் பணியாக மாற்றி விடுவோம். 
நாட்டின் முதல் மனிதனுக்கு கிடைக்கும் மருத்துவம் கடைக்கோடி மனிதனுக்கும் கிடைக்கச் செய்வோம்.
ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அப்போலோ மருத்துவமனைக்கு செல்கிறார். கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் காவேரி மருத்துவமனைக்கு செல்கிறார். 
அப்படியென்றால், அரசு மருத்துவமனையின் நிலை என்ன? அரசை நடத்துபவர்களே அரசு மருத்துவமனையை நம்பவில்லை அப்படித்தானே. என்றார்.

0 comments:
Post a Comment