மௌலவி உட்பட 12 பேர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பொஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மன்னாரில் நேற்றுக் காலை முதல் மாலை வரை முன்னெடுக்கப்பட்ட இராணுவத்தினரின் சுற்றிவளைப்புத் தேடுதலின்போதே புதுக்குடியிருப்புப் பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தௌஹீத் ஜமா அத் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட மௌலவி உள்ளிட்ட 12 சந்தேகநபர்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment