மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் பொலிஸார் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தீவிரவாதிகளின் சதித்திட்டம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸார் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.
இந்தச் சம்பவத்தை மேற்கொண்டவர் குண்டுத் தாக்குதலில் தொடர்புடைய ஸஹாரானின் வாகன சாரதியான 53 வயதுடைய முகமது சாஹீர் ஆதம்பாலெப்பை என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி முகமட் ஆசாத்தின் தாயார் மற்றும் வாகன சாரதி உட்பட எழுவரை சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்திருந்தனர்.
0 comments:
Post a Comment