வாள்வெட்டுக்குழு மருத்துவமனையிலும் அட்டகாசம்

வாள்வெட்டில் காயமடைந்த ஒருவர் அவரது நண்பர்களால் சாவகச்சேரி மருத்துவமனையில் நேற்றுப் பிற்பகல் சேர்க்கப்பட்டார். அதன்பின்னர் மருத்துவமனை வளாகத்துக்குள் நுளைந்த குழு ஒன்று அடாவடியில் ஈடுபட்டது.  

வரணி இயற்றாளைப் பகுதியில் ஒருவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. வாள்வெட்டில் காயமடைந்தவர் 19 வயதுடையவர் என்றும், அவரது முதுகில் பெரும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இரவு 7 மணியளவில் குழு ஒன்று சாவகச்சேரி மருத்துவமனை வளாகத்துக்கு வந்துள்ளது. காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவருடன் நின்றவர்களைத் தாக்கி அடாவடியில் ஈடுபட்டுள்ளது. அதனால் அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது.

இது தொடர்பாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. தாக்குதலை நடத்திவிட்டு அந்தக் குழு வெளியேற முயன்ற சமயம் பொலிஸார் வந்துள்ளனர். அதையடுத்து அந்தக் குழு தமது உந்துருளிகளைக் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸாரால்  7 மோட்டார் சைக்கிள்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன.  மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment