குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு சென்னையில் அஞ்சலி

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு, சென்னையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் சில பகுதிகளில் கடந்த 21 ஆம் திகதி,  அடுத்தடுத்து வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவங்களில், 359 பேர் உயிரிழந்த நிலையில்; 500க்கும் அதிகமானோர் படுகாயம்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், அதில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

இதுகுறித்து அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கையில், “இலங்கையில் நடந்த சம்பவம் போன்று இனி எங்கும் நடக்கக்கூடாது. 

அதற்காக நாம் பிரார்த்திக்க வேண்டும். குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.

இதில் கலந்துகொண்ட கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த மோனா என்ற பெண் கூறுகையில், 

“என்னுடைய 11 ஆவது வயதில் அமெரிக்காவில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவத்தை பார்த்துள்ளேன். அந்த சம்பவம் இன்றும் என் மனதில் இருக்கிறது. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் கொடூரமானது. பலியானவர்களுக்கு என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment