ஸ்ருதிஹாசனின் காதல் பிரிவு

நடிகை ஸ்ருதிஹாசன்  இன்ஸ்டாகிராமில் ஆங்கிலேயே காதலர் மைக்கேல் கோர்சேலை  பிரிந்தது பற்றி மறைமுகமாக ஒரு பதிவைப் போட்டிருக்கிறார்.

அதில், “மீண்டும் ஆரம்பம், ஒரு புதிய கட்டம், காதல் பாடங்களுக்கும் வெளிச்சத்திற்கும் நன்றியும் ஆசீர்வாதமும். இருளான பல இடங்களில் ஆழமாகப் பரவிய பிரகாசமான ஒளி. அதிகமான படங்கள், அதிகமான இசை மேலும் அதிகமாக என்னிடமிருந்து... காத்திருக்க முடியவில்லை. என்னுடைய மிகப் பெரிய காதல் கதையாக எப்போதும் என்னுடனே இருக்கும்,” எனக்  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஸ்ருதியின் காதலரான மைக்கேல் கோர்சேல், ஸ்ருதிஹாசனைப் பிரிந்தது பற்றி டுவிட்டரில் சொல்லியிருந்தார். 

அதன் பிறகுதான் இந்தக் காதல் பிரிவு விவகாரம் வெளியில் தெரிந்தது. இருப்பினும் ஸ்ருதி இன்னும் இந்தப் பிரிவு பற்றி எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment