அமெரிக்க நூலகத்தில் திருடப்படட்ட பைபிள் மீட்பு

பழமைவாய்ந்த புத்தகங்களுடன், பழங்கால அரிய பொக்கிஷங்களும் பாதுகாக்கப்பட்டு வரும் புகழ்பெற்ற நூலகம்தான் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிட்ஸ்பர்க் நகரில் கார்னிஜே. 

இந்த நூலகத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு ஆவண காப்பாளராக பணியாற்றிய ஒருவரும், அவரது நண்பரும் இணைந்து 8 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.56 கோடியே 12 இலட்சத்து 60 ஆயிரம்) மதிப்புடைய 300-க்கும் மேற்பட்ட அரிய பொக்கிஷங்களை திருடிச் சென்றனர். இதில் 404 ஆண்டுகள் பழமையான பைபிளும் ஒன்று.

திருட்டுச் சம்பவம் நடந்து 26 ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பொலிஸார் இந்த வழக்கை மன்றுக்கு எடுத்தனர்.

திருட்டுப்போன அரிய பொக்கிஷங்களை கண்டறியயும் விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில், நெதர்லாந்தில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில், கார்னிஜே நூலகத்தில் இருந்து திருடப்பட்ட 404 ஆண்டுகள் பழமையான பைபிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து 12 ஆயிரம் டாலர் (ரூ.8 லட்சத்து 42 ஆயிரம்) கொடுத்து, அந்த பைபிளை மீட்ட மத்திய புலனாய்வு பொலிஸார், அதனை கார்னிஜே நூலகத்தில் ஒப்படைத்தனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment