நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக அரசு மாபெரும் வெற்றியைப் பெறும் - பன்னீர்செல்லம் தெரிவிப்பு.



மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர்  ரவீந்திரநாத் குமார்   அவர்கள் மணல் அனுப்புவதாக பொய் புகார் கூறியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள்  தேனியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

கூடா நட்பு கேடில் முடிந்தது என கூறிய கலைஞர் நாங்கள் காங்கிரசோடு கூட்டணி சேர்ந்து விட்டோம் என்று கூறியவர் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அப்படி பேசி விட்டு இன்று அவரது புதல்வர் ஸ்டாலின் மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தால் அது அதனால் தந்தையினுடைய பேச்சை மீறி விட்டாரே இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார் தேனியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

 தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் தான் தமிழகத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா வள்ளுவர் கோட்டம் முன்பாக உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் அப்போது இருந்த மன்மோகன் சிங் திமுக தலைவர் கலைஞர் கூட்டணி அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.

 மறைந்த முதல்வர் ஜெயலலிதா பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பின்பாக மறைந்த அவர்களால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அதன் பின்பு அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது.

இவ்வாறு பல சட்ட போராட்டங்களை நடத்தி தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத் தந்த ஒரே தலைவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அப்பேர்ப்பட்ட நாங்கள் கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட மணல் அனுபவம் என்பது பொய்யான குற்றச்சாட்டு.

இதற்காக ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம் வாரிசு அரசியல் செய்கிறார் என காங்கிரஸார் குற்றம் சாட்டுகிறது பற்றி கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் பதில் தெரிவித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம் திறமையும் தகுதியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அது போல தனது மகனும் அரசியலுக்கு வந்துள்ளார் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைக்கு மாறாக அதிமுகவிடமிருந்து பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா அதிகமாக செய்யப்படுவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம் நம்பத்தகாத ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற முடியாது என தெரிவித்தார்.

 தேனி நாடாளுமன்ற வேட்பாளராக அதிமுக வேட்பாளர் ஓபிஎஸ் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றால் மோடி அமைச்சரவையில் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த துணை முதல்வர் உங்களின் ஆசைப்படியே அது நடைபெறும் என தெரிவிப்பு

சேது சமுத்திர திட்டம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தப்படும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், சேது சமுத்திரத் திட்டம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் பொழுது அவை சோதனை ஓட்டம் நடைபெறும் போது அப்பகுதி மணல் பரப்புகள் ஒரு பகுதியில் இருந்து விலகிச் சென்று மீண்டும் ஒன்று சேரக் கூடிய ஒரு தன்மை வாய்ந்த பகுதி என்றும் கடல் மட்டத்தில் ஆழம் தோண்டினால் அப்பகுதியில் மீண்டும் மணல்கள் ஒன்று சேர்ந்து குவிந்து விடும் தன்மை கொண்டதாக இருப்பதால் அதனை அறிgd;வியல் விஞ்ஞானிகள் ஆராய்ந்த பின்னரே அந்த பகுதியில் சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்த முடியாது என அறிக்கை அளித்ததால் சேது சமுத்திரத் திட்டம் செயல் படுத்தப்படாமல் கைவிடப்பட்டது என தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவிப்பு

அதிமுக உன்னுடைய வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம் நான் 40 தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறேன் அனைத்து மக்களிடமும் அதிமுகவுக்கு அமோக வரவேற்பு உள்ளது. சென்ற சட்டமன்றத் தேர்தலில் லயோலா காலேஜ் என்னுடைய கருத்து கணிப்பு மூலம் திமுக-வில் வரும் என கூறினார்கள். ஆனால் அதற்கு மாறாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவருடைய  தலைமையில் அதிமுக அரசின் மாபெரும் வெற்றி பெற்றது. அதுபோல இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக அரசு மாபெரும் வெற்றியைப் பெறும் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment