பாதுகாப்புத் தரப்பினரின் இறுமாப்பே இதற்குக் காரணம் - சி.தவராசா

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை முறியடித்த இறுமாப்பில் இருந்த பாதுகாப்பு தரப்பினர் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் தூக்குகின்றார்களா? என்றே கண்காணித்து வந்தனரே தவிர ஏனைய பரிமாணங்களில் வன்முறைகள் ஊடுருவதை நாட்டில் எதிர்பார்க்காததன் விளைவே நாட்டில் ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்களுக்கு காரணம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முன்னாள் எதிர்க் கட்சித்தலைவர் சி.தவராசா.

யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர்  தெரிவித்ததாவது,

இலங்கை அரசு தமிழீழ விடுதலைப்புலிகளை ஆயுத ரீதியாக முறியடித்த பின்னர் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் மீண்டும் ஆயுதம் என்துகின்றார்களா? என்பதிலேயே கவனம் செலுத்தி வந்தனர்.

உலக வளர்ச்சிக்கு ஏற்ப ஏனைய பரிமாணங்களில் நாட்டில் பயங்கரவாத செயற்பாடு ஊடுருவும் எனப் பாதுகாப்புத் தரப்பினர் எதிர்பார்த்து இருக்கவில்லை.

இரு தேசியக் கட்சிகளும் இணைந்து நாட்டில் நல்லாட்சி அரசை அமைத்தது. ஆனால் அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலை காரணமாக ஜனாதிபதியும் பிரதமரும் ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக்களை காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களின் வெறுப்புணர்வு மற்றும் முரண்பாடுகளின் விளைவையே மக்களாகிய நாம் இன்று அனுபவித்து வருகின்றோம்.

நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் இந்தியா உள்ளிட்ட பல தரப்புகளும் புலானாய்வு பிரிவினரும் எச்சரிக்கை விடுத்தும் ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இதற்கு முழுப் பொறுப்பையும் தற்போதைய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் ஜனாதிபதியும், பிரதமரும் தங்களுக்கு எதுவும் தெரியாது எனக் கூறிவருகின்றனர். இவர்களின் அரசியல் முரண்பாட்டினால் பாதிக்கப்பட்டது இந்த நாட்டு மக்களே-என்றார்.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment