யானை தாக்கி ஒருவர் பலி!




கோவை  சூலூர் அடுத்த செஞ்சேரிமலை  பூராண்டாம்பாளையம் பகுதியில் உள்ள வீரபத்திரன் கோவில்  நிர்வாகிகள் ஆலந்துறை அடுத்த பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு சாமி தரிசனம் செய்த பிறகு அருகில் உள்ள நொய்யல் ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்துச் செல்ல  நொய்யல் ஆற்றுக்கு சென்றனர்.

அப்போது அங்கிருந்த இருந்த ஒற்றையானை ஒன்று அவர்களை துரத்தியது. இதில் அவர்கள் பயந்து ஓடும் போது ஆறுச்சாமி என்பவரும் துரைச்சாமி, சிவானந்தம் ஆகியோர்  யானையிடம் சிக்கிக்கொண்டனர். அவர்களை  யானை  கொம்பால் குத்தியும், காலால் மிதித்ததிலும் ஆறுச்சாமி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். அவருடன் வந்த இருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்

அவர்கள் கொடுத்த தகவலை அடுத்து அப்பகுதி மக்களும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒற்றை யானையை விரட்டி  ஆறுச்சாமி உடலை மீட்டனர்.   

மலைப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது என வனத்துறையினர் எச்சரித்தும் தடையை மீறி அவர்கள் வனப்பகுதிக்குள் சென்றதால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் அப்பகுதியில் இருக்கும் ஒற்றை யானை இதுவரை 5 க்கும் மேற்பட்டோரை கொன்று உள்ளதாகவும், வனத்துறையினர் அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அந்த யானையை பிடித்து வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment