சிக்கலில் கமல்ஹாசன்!கமல்ஹாசன் நடிப்பில், ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் கமல் - ‌ஷங்கர் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது.

இப்படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், சித்தார்த் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் நடந்த நிலையில் திடீரென்று நிறுத்தப்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் பிசியானதால் நிறுத்தப்பட்டதாகவும் மேக்கப் சரியில்லாததால் நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

நாளை தேர்தல் நடைபெற்று முடிவுகள் மே 23-ந் தேதி வெளியாக இருக்கின்றன. எனவே கமல்ஹாசன் மீண்டும் படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டார் என்கிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு இந்த மாத இறுதியிலோ அடுத்த மாத தொடக்கத்திலோ தொடங்கப்படலாம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்ட லைகா புரொடக்‌ஷன்ஸ் படத் தயாரிப்பில் இருந்து பின்வாங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே வேறு தயாரிப்பு நிறுவத்துடன் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த பாகம் வரும் ஜூன், ஜூலையில் தொடங்கப்பட இருக்கிறது. அதற்குள் படத்தில் கமல் இடம்பெறும் காட்சிகளை படம் பிடிக்க ‌ஷங்கர் திட்டமிட்டுள்ளார். 
#Indian2 #KamalHaasan #KajalAggarwal #Shankar
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment