ஐ.ஜி.பிக்கு செக் வைத்த மைத்திரி

பதில் பொலிஸ்மா அதிபராக , சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இன்று நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், இதற்கான நியமனம் கடிதம் வழங்கப்பட்டது.

இலங்கையில் தற்கொலை குண்டுதாக்குதல் நடத்தப்படவுள்ளது என முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதிலும், அதைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலர், பொலிஸ்மா அதிபர் ஆகியோர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து உடனடியாக பதவி துறக்குமாறு இருவருக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுக்க பாதுகாப்பு அமைச்சர் இராஜினாமா செய்தார். எனினும், பதவி துறப்பதற்கு பொலிஸ்மா அதிபர் மறுப்பு தெரிவித்தார் எனக் கூறப்படுகின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பதில் பொலிஸ்மா அதிபரை ஜனாதிபதி அதிரடியாக நியமித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபருக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அதேவேளை, சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா பதில் சட்டமா அதிபராகவும் , மேலதிக கணக்காய்வாளர் நாயகம் சூலந்த விக்ரமரத்ன கணக்காய்வாளர் நாயகமாகவும்,   முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment