புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களை ஒருபோதும் பேராசிரியர்களாகப் பணியமர்த்த மாட்டோம். இவ்வாறு ஜப்பான் நாகசாகி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஜப்பானில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதனால், ஜப்பானில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனை வளாகங்களில் புகைப்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புகைப்பிடிக்கும் பழக்கும் உடைய நபர்களைப் பேராசிரியர்களாகப் பணியமர்த்த மாட்டோம் என நாகசாகி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர், பணியில் சேருவதற்கு முன்பாக புகைப்பழக்கத்தை நிறுத்திவிடுவேன் என உறுதி அளித்தால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment