எல்லை மீறிய பகிடிவதை ; தொடரும் உயிரிழப்புக்கள்

பல்கலைக்கழக மாணவர் ஒருவர்  எல்லை மீறிய பகிடிவதை காரணமாக   தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் ஹோமாகம - தியகம தொழில்நுட்ப பிரிவில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவரே உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குருநாகல் - கும்புக்கெட்டே - சடுவாவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஷனில்க தில்ஷான் விஜேசிங்க என்ற மாணவனே  சாவடைந்தார்.

குறித்த கல்லூரியில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில், தனது மரணத்திற்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவன், பகிடிவதைக்குள்ளானதன் பின்னர் ஏற்பட்ட உளவியல் தாக்கத்திற்கு குருநாகலிலுள்ள மனநல மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றுள்ளதாக கும்புக்கெட்டே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment