தொலைபேசி ஊடாக மைத்திரிக்கு வருத்தம் தெரிவித்தார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனயுடன் தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இலங்கை முகம்கொடுத்துள்ள வெடிப்புச் சம்பவங்கள்  தொடர்பில் தனிப்பட்ட முறையிலும் இந்திய அரசின் சார்பிலும் ஜனாதிபதியிடம் தனது ஆழ்ந்த கவலையை இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா உதவத் தயார் எனவும் இந்திய பிரதமர் ஜனாதிபதியிடம் இதன் போது தெரிவித்தார். 

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான எந்தவொரு உதவியையும் இலங்கைக்கு வழங்க தாம் தயாராக இருப்பதாகக் .குறிப்பிட்ட இந்தியப் பிரதமர், இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் இந்திய அரசும் மக்களும் இலங்கையின் சகோதர மக்களுடனும் அரசுடனும் கைகோர்த்திருப்பதாகக் குறிப்பிட்டார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment