அழுது, புலம்பி நடித்தவர் சாய்பல்லவி

'ரௌடி பேபி' பாடல் மூலம்  பிரபலமானவர் நடிகை சாய்பல்லவி . இருந்தாலும் தமிழில் அவர் நடித்த படங்களில் அவருடைய நடிப்புத் திறமையை நம்மால் இன்னும் தெரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால், நன்றாக நடிக்கவில்லை என்றால் அழுது மீண்டும் அந்தக் காட்சி நன்றாக நடிக்கும் வரை நடிப்பாராம் சாய் பல்லவி என்ற உண்மை  தெரிய வந்துள்ளது. 

'என்ஜிகே' படத்தில் நடிக்கும் போது அழுது, புலம்பி நடித்தவர் சாய் பல்லவி என ஒரு சுவாரசியத் தகவலைத் தெரிவித்தார் சூர்யா.

என்ஜிகே டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் அது பற்றி சூர்யா கூறியதாவது, 

“சாய் பல்லவி, டாக்டர், டீச்சர்... சாய்பல்லவிக்கு படத்துல ஒரு சேலஞ்சிங் கேரக்டர், படப்பிடிப்பு சமயத்துல அழுவாங்க. டேக் முடிஞ்சதுக்கப்புறமும் நல்லா பண்ணியிருக்கலாமேன்னு வந்து அழுவாங்க.

என்னமா இவ்வளவு சீரியசா எடுத்துக்கறன்னு எல்லாரும் கேப்பாங்க. நாளைக்கு வேணா திரும்ப எடுக்கலாம்னு சொல்வோம். அந்த அளவுக்கு நடிப்பு மேல ஆர்வமாக இருக்கிறவங்க. இல்லன்னா இந்த அளவுக்கு ஒரு இடத்துல அவங்க வந்து நிக்க முடியாது. 

இன்னும் எனக்கு நல்லா பண்ணத் தெரியும்னு தனியா வந்து புலம்பிட்டிருப்பாங்க. செல்வா அப்புறம் தனியா போய் பேசி அவங்கள ஆறுதல் படுத்துவாரு,” என்றார்.Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment