விடுதலைப் புலிகள் விட்டுச் சென்ற தங்கத்தை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு முத்தையன்கட்டுப் பகுதியில் பெருந்தொகையான தங்கங்கள் புதைத்து வைத்திருப்பதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தவலையடுத்து, தங்கத்தை மீட்க நடவடிவக்கை எடுத்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இறுதி யுத்தத்தின் போது குறித்த இடத்தில் சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்கங்கள் புதைக்கப்பட்டுள்தாகவும் குறித்த பகுதியில் விடுதலைப்புலிகளின் காலத்தில் வங்கி சேவை இடம்பெற்று வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு நீதிபதியின் உத்தரவுக்கு அமைவாக பொலிஸார் பெக்கோ வாகனத்துடன் குறித்த இடத்திற்கு சென்று மறைத்து வைத்துள்ள தங்கங்களை மீட்பதற்கான பணியினை ஆரம்பித்துள்ளனர்.
முல்லைத்தீவு இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகள் குறித்த நடவடிக்கையில் இணைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment