மின்னல் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கொடுப்பனவு

உடுவில், குப்பிளான் தெற்கில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சமுர்த்தி பாதுகாப்பு நிதியத்தின் மரணத்திற்கான கொடுப்பனவாக ரூபா  ஒரு லட்சம் இன்றையதினம் வழங்கப்பட்டது.


யாழ்மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகம் தலைமையில் உடுவில் பிரதேச செயலர் ஜெயக்காந், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி முரளிதரன், வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் அபராசுதன் மற்றும் கிராம சேவகர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் அடங்கிய குழுவினர் மின்னல் அனர்த்தம் நிகழ்ந்த சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.இவர்கள் உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கும் சென்றனர்.  இதன்போது சமுர்த்தி பாதுகாப்பு நிதியத்தின் மரணத்திற்கான கொடுப்பனவு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கொடுப்பனவு ரூபா ஒரு லட்சத்தில்  உடனடியாக 15 ஆயிரம் ரூபாவை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் அரச அதிபர் கையளித்தார்.


உயிரிழந்தவர்களில் ஒருவருக்கான வீட்டுத்திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் வழங்குமாறும் அரச அதிபர் பணித்துள்ளார். அப் பகுதிகளில் அடிக்கடி மின்னல் தாக்கம் நிகழ்வதற்கான காரணம் குறித்து ஆராய்வதோடு அப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள இடிதாங்கிகள் இயங்கு நிலையில் இருக்கின்றதா மற்றும் உரிய தரத்தில் உரிய முறைப்படி பொருத்தப்பட்டுள்ளதா என்றும் உடனடியாக பரிசீலித்து நடவடிக்கையெடுக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.


நீண்ட நாள்களுக்குப் பின்னர் யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்றையதினம் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன்போது, குப்பிளான் பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த மூவர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment