கிளிநொச்சி பெரிய பரந்தன் கிராம மக்கள் இன்று எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக முன்றலில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“சுத்தமான குடி தண்ணீர் கேட்கும் எங்களது கிராமத்துக்கு மதுபானசாலையா தீர்வு?“ என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி ஆகியவற்றின் அதிபர்கள், பெரிய பரந்தன் கிராம மக்கள், அமைப்புகள் ஆகியோர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
“வேண்டாம் வேண்டாம் மதுபானசாலை வேண்டாம், குடிப்பதற்கு சுத்தமான நீரை வழங்கு மதுபானத்தை அல்ல, பெரிய பரந்தன் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் மதுபானசாலை வேண்டாம், மாணவிகள், பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குட்ப்படுத்தும் மதுபானசாலை வேண்டாம்“ போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
0 comments:
Post a Comment