தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகர் நாகார்ஜுனா, இவர் 'சொக்கடே சின்னி நயனா' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார்.
அந்தப் படத்திற்காக நயன்தாரா ஜோடியாக நடித்தால் நன்றாக இருக்கும் என அவர் சொல்லியிருக்கிறார். ஆனால், நயன்தாரா அந்தப் படத்தில் நடிக்க கால்ஷீட் இல்லை என்று மறுத்துவிட்டாராம்.
தமிழில் விஜய்யுடன் ஒரு படம், தர்பார் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. அந்தப் படங்களில் நடிப்பதால்தான் நாகார்ஜுனா உடன் நடிக்க முடியவில்லை என்று சொல்லி விட்டாராம். ஏற்கெனவே நாகார்ஜுனா, நயன்தாரா தெலுங்கில் 'பாஸ், கிரீக்க வீருடு' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
0 comments:
Post a Comment