ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் 'பிரேக்கிங் நியூஸ்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பானுஸ்ரீ தமிழில் அறிமுகமாகிறார்.
ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் படம் `பிரேக்கிங் நியூஸ்'. இந்த படத்தில் ஜெய் ஜோடியாக பானுஸ்ரீ நடிக்கிறார். தெலுங்கு பிக்பாஸ் மூலம் பிரபலமான இவர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
இது குறித்து பானுஸ்ரீ கூறும்போது,
"இந்த படத்தில் நான் ஜெய்யின் காதலியாக நடிக்கிறேன், அவரது அப்பாவித்தனத்தால் அவர் மீது காதல் வயப்பட்டு, பின் அவரை திருமணம் செய்து கொண்டு, பின்னர் ஈகோ மற்றும் பிடிவாதத்தால் பிரிந்து விடும் கதாபாத்திரம். நான் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் அதில் அடுக்குகள் இருக்கும். ஆரம்பத்தில், நான் துடுக்குத்தனமான மற்றும் உற்சாகமான ஒரு பெண்ணாக இருப்பேன். திருமணத்திற்கு பிறகு கலாச்சாரத்துடன் ஒன்றி வாழும் அமைதியான பெண்ணாக மாறி விடுவேன்."
மேலும் பிரேக்கிங் நியூஸ் சமூகத்தின் நலனுக்காக சூப்பர் ஹீரோவாக மாறும் ஒரு சாதாரண மனிதனை சுற்றி நிகழும் ஒரு ஃபேண்டஸி ஆக்ஷன் படம். இது வெறுமனே கிராஃபிக்ஸ் வைத்து உருவாகும் படம் அல்ல, நல்ல எமோஷனை உள்ளடக்கிய படம், நல்ல கருத்துக்களையும் கொண்டுள்ளது என்றார்.
பானுஸ்ரீ ஏற்கனவே 15 நாட்கள் படப்பிடிப்பை முடித்து விட்ட நிலையில், அடுத்ததாக சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்த படத்திற்கு ஜானிலால் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார்.
#BreakingNews #Jai #BhanuSree
0 comments:
Post a Comment