விண்கல் மீது குண்டுத்தாக்குதல்

ஜப்பானின் Hayabusa2 எனும் விண்கலம் பரிசோதனை முயற்சியாக  Ryugu விண்கல் மீது பிளாஸ்டிக் குண்டுத்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்தது.

இந்தத் தாக்குதலானது கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிலையில் சில வாரங்கள் கழித்து தாக்குதலால் ஏற்பட்ட விளைவுகளை காண்பிக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

Japan Aerospace Exploration Agency (JAXA) நிறுவனத்தினால் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலின்போது குறித்த விண்கல்லின் மேற்பகுதியில் பள்ளம் ஒன்று உருவாகியுள்ளதாம்.

இந்த பள்ளம் 2 மீற்றர்கள் தொடக்கம் 3 மீற்றர்கள் வரை விட்டம் கொண்டதாக காணப்படுகின்றது.

பள்ளத்தின் மேற்பரப்பு கற்பாறைகளினால் மீண்டும் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள Kobe பல்கலைக்கழக பேராசிரியரான Masahiko Arakawa தாம் மீண்டும் பள்ளத்தை உருவாக்குவதற்கு முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.

இவர் விண்கல்மீது குண்டுத் தாக்குதலை மேற்கொள்ளும் திட்டத்தில் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment