நல்லெண்ணத் தூதுவரானார் மியா

மலையாள நடிகை மியா ஜார்ஜை  லோக்சபா தேர்தலில் இவரை கோட்டயம் பகுதிக்கான நல்லெண்ணத் தூதுவராக நியமித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். 


இதற்கான பொறுப்பை அண்மையில் கோட்டயத்தில் உள்ள பசீலியஸ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் இவரிடம் ஒப்படைத்தது தேர்தல் ஆணையம்.


இதுகுறித்து மியா கூறும்போது, “இதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். இதன் மூலம் இளம் தலைமுறையினரை, குறிப்பாக கல்லூரி மாணவர்களை அதிகப்படியாக வாக்களிக்க வைக்க முயற்சிப்பேன். வாக்குப் போடுவதைத் தவிர்த்து மற்றப்படி எந்தவிதமான தேர்தல் நடைமுறைகளிலும் நான் ஒருபோதும் தலையிடப்போவதில்லை” என்றார்.

மியா ஜார்ஜ் தமிழில், இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர்.

Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment