கல்லாக மாறிய மனிதர்கள்

சிலைகள் மற்றும்  மனிதர்கள் கல்லாக மாறிய அதிசயம் இத்தாலியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது.

இத்தாலியில் பாம்பெய், ஹெர்குலானியம் என இரு நகரங்கள் உள்ளன. இந்த இரு நகரங்களுக்கும் அருகே மவுண்ட் வெசுவியஸ் என்ற எரிமலை இருந்துள்ளது.


எப்போதும் அமைதியாக இருந்த நிலையில் எரிமலை தீடிரென்று கி.பி. 79-ம் ஆண்டில் தன் சுயரூபத்தைக் காட்டியது. அந்த தினத்தில் அந்நகரில், பொதுமக்கள் ஒரு கொண்டாட்ட தினத்தை மகிழ்ச்சியைக் கழித்துக்கொண்டிருந்தார்களாம்.

அந்நேரத்தில் தான், திடீரென எரிமலை வெடித்துச் சிதறியது. கண் இமைக்கும் நேரத்தில் பாம்பெய், ஹெர்குலானியம் நகரமெங்கும் புகை சூழந்தது.


லாவா எனப்படும் நெருப்புக் குழம்பு பெருமளவில் வழிந்தோட, இந்தக் கோரச் சம்பவத்தில் இரு நகரங்களும் நெருப்புக் குழம்பில் சிக்கி முழுமையாக மூழ்கிப் போகின.

இந்த நிலையில், ஒரு காலகட்டத்தில் இரு நகரங்களையும் எல்லோரும் முற்றிலும் மறந்தே விட்டனர். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சம்பவத்தைக் கேள்விப்பட்ட கட்டிடக் கலை நிபுணர்கள் ஹெர்குலானியம் இருந்த இடத்துக்குச் சென்றுள்ளனர்.


புதைந்திருந்த இரு நகரங்களையும் 1738 ஆம் ஆண்டு முழுமையாகத் தோண்டி ஆய்வு செய்தார்கள். இதில் சுமார் 12 அடுக்கு மண் படிவங்கள் இரு நகரங்களையும் மூடி மண் மேடாக்கியிருந்துள்ளது. அனைத்து உயிரினங்களையும் நெருப்புக் குழம்பு மூழ்கடித்திருந்தது.

இதில் கல்லாக மாறிய மனிதர்கள் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டு அந்நாட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஒரு சோகமான வரலாற்றுப் பின்னணி கொண்ட அந்த இரு நகரங்களும் இப்போது இத்தாலியில், முக்கியச் சுற்றுலாத் தலங்களாக விளங்குகின்றன.
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment