சஹரான் ஹஷீமுடன் தொடர்பு வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
47 வயதுடைய மொஹமட் ஷாபிர் என்ற நபரே மதவாச்சிய - இகிரிகொல்லேவ பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதவாச்சிய பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்றைய தினம் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment