ஜெட் ஏர்வேசில் பணியாற்றி வந்த மும்பையை சேர்ந்த ஊழியர் ஒருவர் 4 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிதி நெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சேவை நிறுத்தப்பட்டதால் அந்த நிறுவன ஊழியர்களுக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மும்பையைச் சேர்ந்த சைலேஷ் குமார் சிங் என்பவர் 4 ஆவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துக்கொண்டார்.
53 வயதாகும் இவர் கடந்த 3 ஆண்டுகளாக வயிற்று புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த வெள்ளியன்று வீடு திரும்பிய சைலேஷ் அன்றைய தினமே தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரியவந்துள்ளது.
பல மாதங்களாக சம்பளம் வராததால் வருமானமின்றி இருந்ததாலும், கடுமையான வயிற்று வலி காரணமாகவும் அவர் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment