இலங்கை முதல் ஜேர்மன் வரை வெடிகுண்டுத் தாக்குதல்கள்

ஈஸ்டர் பண்டிகையின் போது ஏற்பட்ட  முதல் தாக்குதல் இதுவல்ல. இதற்கு முன்பே, ஈஸ்டர் பண்டிகையை குறி வைத்து பல நாடுகளில், அதாவது பாகிஸ்தான் முதல் ஜேர்மன் வரைத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈஸ்டரின் போது லாகூரில்  நடந்த தாக்குதலில் எழுபதுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஜமாத் உல் அக்ரர் அமைப்பு பொறுப்பேற்றது. தாக்குதலில் மரணித்தவர்களில் அதிகமானவர்கள் இஸ்லாமியர்கள்.

எகிப்தில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பாக காப்டிக் தேவாலயத்தில் நடந்த தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதலில் 48 பேர் கொல்லப்பட்டனர்.

இதனை அடுத்து தேவாலயத்தின் நிகழ்ச்சிகள் யாவும் ரத்துச் செய்யப்பட்டன.

இரண்டு குண்டுதாரிகள் இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. அதில் ஒருவர் பெயர் மஹமூத் ஹசன் முபாரக் அப்துல்லா.

2016 மார்ச் மாதம் கைரோவில் நடந்த தேவாலய தாக்குதலிலும் இவருக்குத் தொடர்புள்ளதாக அப்போது அந்நாட்டு அரசு கூறியது.

நைஜீரியாவில் 2012 ஆம் ஆண்டு கடுனா நகரத்தில் காரில் குண்டுகள் நிரப்பப்பட்டு  தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.

இந்தப்  பயங்கரவாதத் தாக்குதல்களில் 38 பேர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக போகோ ஹராம் அமைப்பு குற்றஞ்சாட்டப்பட்டது.

அந்த சமயத்தில் இஸ்லாம் கிறிஸ்தவ மோதல்கள் கடுனா பகுதியில் தொடர்ந்து நடந்துவந்தன. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியானார்கள்.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தெற்கு ஜேர்மனில் துப்பாக்கிதாரி சுட்டதில் கன்னியாஸ்திரிகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் அங்கு மதர் தெரேசா ஏற்படுத்திய மிஷனில் ஊழியம் செய்தவர்கள்.

இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் அமைப்பு மீது இந்த தாக்குதலுக்காக குற்றஞ்சாட்டப்பட்டது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment