குஜராத் மாநிலத்தில் ஒரேயொரு வாக்காளருக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி நேற்று 100 சதவீதம் வாக்குப்பதிவைக் கண்டது.
குஜராத் மாநிலத்தின் ஜுனகத் மாவட்டத்துக்குட்பட்ட கிர் வனப்பகுதியில் சிங்கங்களைப் பாதுகாக்கும் மிகப்பெரிய தேசிய பூங்கா அமைந்துள்ளது.
இந்த வனப்பகுதிக்கு அருகாமையில்தான் பாரத்தாஸ் பாப்பு என்பவர் வசித்து வருகிறார்.
அந்த மாவட்டத்துக்குட்பட்ட தொகுதிகளில் நேற்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் பாரத்தாஸ் பாப்பு என்ற ஒரேயொரு வாக்காளருக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.
பாரத்தாஸ் பாப்பு இன்று இங்கு வந்து வாக்களித்தார். இதனால், 2019- நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை கண்ட தனிப்பெருமை இந்த வாக்குச்சாவடிக்குக் கிடைத்துள்ளது.
தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாரத்தாஸ் பாப்பு,
”ஒரு வாக்காக இருந்தாலும் வாக்குச்சாவடி அமைப்பதற்காக அரசு பணத்தை செலவிடுகிறது. என் இடத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
இதேபோல் நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களித்து அனைத்து பகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும்’ என வலியுறுத்தினார்.
0 comments:
Post a Comment