விஜயின் படங்கள் என்றாலே ஏதாவது பிரச்சனை இருந்து கொண்டு தான் வருகிறது. "தலைவா படம் தொடங்கி இறுதியாக வெளியான சர்கார்" படம் வரை விஜய் படங்கள் தொடர் பிரச்சனைகளை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது உருவாகிவரும் தளபதி 63 படமும் கதை திருட்டு பிரச்சனையை சந்தித்துள்ளது.
தளபதி 63 படத்தை என்னுடைய கதையை வைத்துதான் அட்லீ இயக்குகிறார் என்று கே.பி செல்வா என்ற உதவி இயக்குனர் ஒருவர் அட்லீ மீது பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார்.
சமீபத்தில் கே.பி செல்வா பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி தான் எடுத்த குறும் படத்தை மையமாக வைத்து தான் விஜய் 63 ஆவது படத்தின் கதையை இயக்குனர் அட்லீ ரெடி பண்ணியிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் தான் பெண்கள் கால்பந்து விளையாட்டை கதைக்களமாக வைத்து 265 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து வைத்திருந்தேன். ஆனால், அதற்கிடையே இந்த கதையை அட்லீ இயக்கவுள்ளார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என்று பகிங்கமாக கூறி அதிர்ச்சியளித்தார்.
0 comments:
Post a Comment