பெற்றோருக்குப் பயந்து தன்னைக் கடத்தியதாகக் கூறி சிறுவனொருவன் பொலிஸ் நிலையம் சென்றுள்ளான்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் நடந்துள்ளது.
வடமராட்சி மாலு சந்திப் பகுதியில் நண்பர்களுடன் நீண்ட நேரம் பொழுதைக் கழித்த சிறுவன், வீடு திரும்பத் தாமதம் ஆகியது.
இதனால் தன்னை சிலர் வானில் கடத்திச் சென்றனர் என்றனர் என பெற்றோரிடம் கூறியுள்ளான்.
பதற்றமடைந்த பெற்றோர் நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு சிறுவனை அழைத்துச் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுவன் பொய் கூறியதை அறிந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment