தாதாவான ஸ்ருதிஹாசன்

எஸ்பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன்,  ஒரு ஹிந்தி படத்தில் தாதாவாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். 

பவர் என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், இவரோடு வித்யூத் ஜம்வால் என்பவர் நடிக்கிறார். அவரும் படத்தில் தாதாவாகத்தான் நடிக்கிறாராம். 

படு ஆக்ஷன், த்ரில்லராக எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தை மகேஷ் மஞ்சிரேக்கர் என்பவர் இயக்குகிறார். 

நிழல் உலக தாதாக்களின் கதையை களமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தை வரும் ஜூலை 12 இல் வெளியிட படக் குழு திட்டமிட்டிருக்கிறது. 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment