தெலுங்கு மெகா சீரியல் உலகில் பிரபலமானவர்களாக வலம் வரும் இளம் நடிகைகள் இருவர் கார் விபத்தில் உயிரிழந்த செய்தி டோலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அனுஷா ரெட்டி (வயது-21), பார்கவி (வயது-20) ஆகிய இரு நடிகைகளே உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் அனந்தகிரி வனப்பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருந்த தெலுங்கு மெகா சீரியல் ஒன்றின் படப்பிடிப்புக்காக சென்றிருந்தனர்.
படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னர் காரில் திரும்பிக்கொண்டிருந்தார்கள். இதன்போது, விகாராபாத் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அப்பாரெட்டிகுடா அருகே மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பார்கவி சம்பவ இடத்திலேயே மரணமடைய, உடன் பயணித்த அனுஷா ரெட்டி பலத்த காயங்களுடன் ஹைதராபாத் உஸ்மானியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பயனின்றி சாவடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சாரதி உட்பட ஆண்கள் இருவருமே பலத்த காயங்களுடன் ஹைதராபாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பார்கவி தெலுங்கில் பாப்புலராக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘முத்யால முக்கு’ எனும் நெடுந்தொடரின் நாயகி. அனுஷா ரெட்டி தெலுங்கு, தமிழ் என இரு மொழி மெகா சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தவர்.
தமிழில் ராஜா ராணி சீரியலில் கார்த்திக்கின் முன்னாள் காதலியாக நடித்து வந்தவர். பிறகு அந்தத் தொடரிலிருந்து விலகி மற்றொரு தமிழ் நெடுந்தொடரில் நாயகியாக அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நம்பிக்கை தரும் இளம் நடிகைகளாக இருந்த வந்த இருவரையும் ஒரு சேர இழந்ததில் சீரியல் உலகம் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது.
0 comments:
Post a Comment