குண்டுத் தாக்குதல் ; வவுனியா இளைஞனின் இறுதிக்கிரியை

கொழும்பில் நேற்று  இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக்கிரியை வவுனியாவில் இன்றையதினம்  நடைபெற்றது.

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் வவுனியா, வேப்பங்குளம் நான்காம் ஒழுங்கையைச் சேர்ந்த 21 வயதுடைய முகமட் நிஸ்தார் நலீர் என்ற இளைஞன் உயிரிழந்தார்.


இளைஞனின் சடலம் வவுனியாவுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்றது.

வவுனியா மாவட்டச் செயலர் ஐ.எம்.ஹனீபா , மேலதிக செயலர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா.உதயராசா ஆகியோர் இறுதிக்கிரியையில்  கலந்து கொண்டு உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினருக்கு அரச இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாவை கையளித்தனர்.


இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ,மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ரிப்கான் பதியூதின், நகரசபை உப தவிசாளர் சு.குமாரசாமி , பொலிஸார் , இளைஞர்கள் , பொதுமக்கள் , வர்த்தகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment