தாய்நாடு திரும்பும் புலம்பெயர் தமிழர்களுக்கு முக்கிய செய்தி!
யாழ்ப்பாண‌ம் வ‌ந்து ஒரு மாத‌ம் குடி கூத்த‌ன‌ம், விழா, ப‌ண்டிகை, காதுகுத்து, க‌ல்யாண‌ம், க‌ருமாதி எல்லாத்தையும் செல‌வு ப‌ண்ணிட்டு போகும் போது ம‌ட்டும் ஏதோ நிமிட‌த்துக்கு ச‌ம்ப‌ள‌ம் எடுக்கும் பில்கேட்ஸ் மாதிரி நினைத்து நேர‌ம் மிச்ச‌ம் பிடிச்சு சாம‌ம் சாம‌மாக‌ வான் ரைவ‌ர் ஓட‌ச் சொல்லி அவ‌னோ காலை 3 ம‌ணிக்கு புத்த‌ள‌ம் தாண்ட‌ எங்காவ‌து கொண்டு அடிச்சு அவ‌னும் செத்து நீங்க‌ளும் செத்து இதுக்கு ப‌தில் ஒரு நாளைக்கு முன்ன‌ர் கிள‌ம்பி கொழும்பில் எங்காவ‌து த‌ங்கிட்டு ப‌க‌ல் பிர‌யாண‌ம் செய்தால் அடுத்த‌ விடுமுறைக்கு உயிரோடையாவ‌து நாட்டுக்கு வ‌ர‌ முடியும்.

நீங்கள் நினைப்பது போல் 5 மணி நேரத்திலேயே அல்லது 6மணி நேரத்தில் விமானநிலையம் செல்ல முடியுமா? சிந்திப்போம் இது ஒன்றும் வெளிநாட்டு நெடுஞ்சாலை வீதி  இல்லை.

அவ்வளவு அனுபவம் கூடிய ஓட்டுநர்களும் இங்கு இல்லை.

வாகனங்கள் பதிவுசெய்ய முன்னரே விசாரியுங்கள். ஓடும் போது தொலைபேசியில் இருப்பார்கள் சில ஓடுனர்கள்.

வெற்றிலை போடுவது போல போதை பொருள்கள் போடுவார்கள்.

சற்று விசாரியுங்கள் பிறகு உங்கள் பயணத்தை தொடங்குங்கள்.

சற்று சிந்திப்போம் எம் அருமை உறவுகளே, உயிர் இழப்பினை தடுப்போம்.

முக்கியமான ஒரு விடயம் சில இளைஞர்கள் வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடம் வாகனம் எடுத்து தரும் படியும் மாதாந்தம் பணத்தினை தாங்கள் செலுத்துவதாகவும், அவர்களும் உழைப்பதற்க்கு ஒரு வழி என உதவுகிறார்கள், ஆனால் அனுபவம் இல்லாத அந்த இளைஞர்கள் படும்பாடு உயிர் மாயும் வரை தொடர்கிறது.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment