விஜய் சங்கர் தேர்வு தொடரும் சர்ச்சை

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வான நிலையில் அது குறித்த சர்ச்சை இன்னும் ஓயவில்லை.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இம்முறை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மே 30,  இல் ஆரம்பித்து, ஜூன் 14,  வரை நடக்கவுள்ளது.

இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அணியில் தமிழக வீரர் விஜய் சங்கர் இதில் இடம்பிடித்திருந்தார்.

4 ஆவது வீரருக்கான இடத்தில் அம்பதி ராயுடுவுக்கு பதிலாக விஜய் சங்கர் தேர்வானார்.

இதற்கு அண்மைக்காலமாக அம்பதி ராயுடுவின் மோசமான பார்ம் காரணமாக தெரிவிக்கப்பட்ட போதும், சர்வதேச அளவில்  அனுபவம் இல்லாத வீரரான விஜய் சங்கர் அணியில் தேர்வு செய்யப்பட்டது கடும் விமர்சனத்தை எழுப்பியது.

இந்த நிலையில் தமிழக் வீரர் விஜய் சங்கரின் விக்கிபீடியா பக்கத்தில், இந்திய இரசிகர் ஒருவர் இந்திய அணியின் 4 ஆவது இடத்துக்கு அம்பதி ராயுடுவை விட விஜய் சங்கர் தான் சிறந்த தேர்வு என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குடிபோதையில் தெரிவித்ததாக பதிவிட்டார். 

ஆனால் 6 நிமிடத்தில் அந்த வார்த்தைகள் நீக்கப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment