Voice History நீக்க

கூகுள் தேடல், விரைவான தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துதல் உட்பட பல்வேறு செயல்பாடுகளுக்கு பெரிதும் உதவியாக இருப்பது கூகுள் அசிஸ்டன்ட் ஆகும்.

இதனூடாக குரல் வழி மூலம் அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ள முடியும். இவ்வாறு செய்யும்போது குரல்கள் சேமிக்கப்பட்டிருக்கும்.

எனினும் சேமிக்கப்பட்ட Voice History இனை நீக்குவதற்கான வசதியும் தற்போது, தரப்பட்டுள்ளது.

இணைய உலாவியில் Voice History-யினை நீக்குவதற்கு பின்வரும் படிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

இதன்படி இணைய உலாவியில் myactivity.google.com எனும் முகவரியை தட்டச்சு செய்து குறித்த பகுதிக்கு செல்லவும்.

தோன்றும் திரையில் Delete Activity By என்பதை தெரிவு செய்யவும். அதில் தரப்பட்டுள்ள கால சட்டகத்தில் All Time என்பதை தெரிவு செய்யவும்.

பின்னர் தோன்றும் Drop-Down மெனுவில் Voice and Audion என்பதை தெரிவு செய்தி Delete பொத்தானை கிளிக் செய்யுங்கள்.

அதன் பின்னர் தோன்றும் பொப்பப் விண்டோவில் மீண்டும் Delete என்பதை கிளிக் செய்து உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

இதேபோன்று ஸ்மார்ட் கைப்பேசிகளில் Voice History இனை நீக்குவதற்கு கூகுள் ஆப்பினை திறந்து, அதில் தரப்பட்டுள்ள More என்பதை கிளிக் செய்து Search Activity என்பதை தெரிவு செய்யவும்.

இதன்போது தானாகவே myactivity.google.com எனும் முகவரிக்கு செல்லும்.

தோன்றும் திரையில் Delete Activity By என்பதை தெரிவு செய்யுங்கள்.

அங்கு தரப்பட்டுள்ள கால சட்டகத்தில் All Time என்பதை தெரிவு செய்யவும்.

அதன் பின்னர் தோன்றும் Drop-Down மெனுவில் Voice and Audion என்பதை தெரிவு செய்தி Delete பொத்தானை கிளிக் செய்யவும்.

அதன் பின்னர் தோன்றும் பொப்பப் விண்டோவில் மீண்டும் Delete என்பதை கிளிக் செய்து உறுதிப்படுத்திக்கொள்ளவும்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment