பாரவூர்தியுடன் பேருந்து மோதியதில் ஏற்பட்ட தீயில் கருகி  சம்பவ இடத்திலேயே  20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தென்கிழக்கு மெக்ஸிகோவில்  நடந்துள்ளது.
மெக்சிகோ நாட்டின் மெக்சிகோ சிட்டி நகரிலிருந்து டுஸ்லா குடரஸ் பகுதி நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்தும்  பொருள்கள் ஏற்றிக்கொண்டு எதிரே வந்த பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியது.
இதன்போது இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.
விபத்தில் பேருந்து மற்றும்  பாரவூர்தியில் பயணம் செய்த 20 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 


0 comments:
Post a Comment