ஆணழகனுக்கு வந்த சோதனை

ஆணழகனுக்கு மருத்துவர்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் ஒன்று பிரேசில் நாட்டில், நடந்துள்ளது.

குறித்த ஆணழகன் ஊசி மூலம் தனது மேல்கை தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்தியமை தொடர்பிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சா பாலோ என்ற இடத்தைச் சேர்ந்த வால்டிர் செகாட்டோ என்பவர் உடற்பயிற்சி மீது தீராத காதல் கொண்டிருந்தார். 

இதற்காக உடற்பயிற்சி மையத்திற்குச் சென்று தனது உடலின் தசைகளை மேம்படுத்தினார்.

ஆனாலும் திருப்தியடையாத வால்டிர், தசை வளர்ச்சிக்கென பிரத்யேகமான ஊசிகளைப் பயன்படுத்த  ஆரம்பித்தார். இதனால் வால்டிரின் புஜத் தசைகள் கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு வளர்ந்தன.

அவரின் நெஞ்சுப் பகுதி கிட்டத்தட்ட ஒரு அடிக்கும் அதிகமாக வளர்ந்து ஒழுங்கற்ற முறையில் அமைந்துள்ளது. 

வால்டிர் தொடர்ந்து ஊசிகளைப் பயன்படுத்தினால் அவரது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment