முல்லையில் தொழில் முயற்சியாளர்களுக்கு பயிற்சிப் பட்டறை

இளம் தொழில் முயற்சியாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது


Undp நிறுவனம் சர்வோதய நிறுவனம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன இணைந்து  இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.


 காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை இடம்பெற்ற இந்த பயிற்சி பட்டறையில் இளைஞர்களுக்கான சுய தொழில் முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் சுயதொழிலின்  ஊடாக  முன்னேறிய அனுபவம் வாய்ந்தவர்களால் கருத்தமர்வு நடத்தப்பட்டது


சர்வோதய நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் எஸ் சத்தியகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர்,  தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவுச் சங்கத்தின்  முல்லைத்தீவு மாவட்ட முகாமையாளர் மற்றும் சர்வோதயம் undp  நிறுவனங்களின்  பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்


முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மாந்தை கிழக்கு ஒட்டுசுட்டான் கரைதுறைப்பற்று புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 100 இளைஞர்கள் பங்குபற்றினர்.Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment