காங்கிரஸ்-பா.ஜனதா தவிர 3வது அணி அமைய வாய்ப்பில்லை: மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் 3வது அணி உருவாக்க தமிழகம் வரவில்லை. அவர் ஆலயங்களை வழிபட வந்தார். அவருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது.

இந்தியாவில் பா.ஜனதா, காங்கிரஸ் தவிர்த்து 3-வது அணி அமைய வாய்ப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருப்பினும் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகே தெரியவரும்.சந்திர சேகரராவ் வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற தமிழிசை சொல்லி இருக்கிறார். அவர் வருகை தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, என்று தமிழிசை கூறியதில் ‘ க்’கை எடுத்துவிடுங்கள். அது தாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment