52 கோடிக்கு ஏலம் போன வைரம்

சிறப்பு வண்ணம் கொண்ட வைரம் ஒன்று இந்திய மதிப்பில் சுமார் 52 கோடி ரூபாவுக்கு ஏலம் போயுள்ளது.

பபிள்கம் பிங்க் என்ற சிறப்பு நிறம் கொண்ட இந்த வைரம் ஹாங்காங் நகரத்தில் ஏலம் விடப்பட்டது.

 3 புள்ளி 43 கரட் எடை கொண்ட அந்த வைரத்தை புகழ்பெற்ற கிறிஸ்டீஸ் ஆசியா நிறுவனம் ஏலம் விட்டது. ஏலத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

இறுதியில் வைரத்தை மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிராங்கோயிஸ் குரியல் என்பவர் இந்திய மதிப்பில் 53 புள்ளி 23 கோடி ரூபாவுக்கு ஏலம் எடுத்தார்.

இதுபோன்ற விசித்திர வண்ணம் கொண்ட வைரத்தை தான் பார்த்ததில்லை என்று கூறிய பிராங்கோயிஸ், குறிப்பிட்ட வைரத்திற்கு இன்னும் அதிகம் விலை கொடுத்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment