உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று கூடி, தனது முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கையில், இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் தற்போது பாதுகாப்புத் தரப்பினரால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இது குறித்து நாடாளுமன்றில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நாடாளுமன்றத்தினால் விசேட தெரிவுக்குழுவொன்று அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டது.
பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான இந்த தெரிவுக் குழுவில், அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஆசு மாரசிங்க, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, காவிந்த ஜயவர்தன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
இந்த தெரிவுக்குழுவின் முதலாவது விசாரணை அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ளது. இதில், முதலாவது நபராக சாட்சியம் வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஜெனரல் சாந்த கோட்டேகொட முன்னிலையாகியுள்ளார்.
இவர் இன்று நண்பகல் 1 மணி வரையில் சாட்சியம் பதிவு செய்யப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment