5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளேன் - பிரதமர் மோடி

டெல்லியில் பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா , பிரதமர் மோடி கூட்டாக  பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி   கூறியதாவது:-

தேர்தல் பரப்புரை முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது; நான் சற்று இளைப்பாறலாம். இது ஜனநாயகத்தை கொண்டாட வேண்டிய தருணம்.

தேர்தலை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி.
 
கடந்த 2 தேர்தல்களில், ஐபிஎல் கூட நடத்தப்படவில்லை. அரசாங்கம் வலுவாக இருக்கும்போது, ஐபிஎல், ரம்ஜான், பள்ளி பரீட்சை மற்றும் மற்றவைகள்  அமைதியாக நடக்கும்.பண்டிகை மற்றும் கிரிக்கெட் போல தேர்தலும் திருவிழாவை போல நடக்கிறது -

நாங்கள் கடந்து வந்த பாதை எளிதானதல்ல; 5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளேன்.

மக்கள் ஏகோபித்த ஆதரவு இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. ஐந்து வருடங்கள் ஆட்சி நடத்தி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சி அமைப்போம் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்; பாஜகவிற்கு இந்த வருட மக்களவைத் தேர்தலில் நாட்டை ஆள்வதற்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும். அறுதி பெரும்பான்மையுடன் தொடர்ந்து 2-வது முறையாக பாஜக ஆட்சிக்கு வரும். இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம். 5 வருடம் ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி,  உங்களின் ஆசீர்வாதங்கள் எங்களுக்கு தேவை என கூறினார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment