80,000 பேருக்கு இலவசமாக உணவு வழங்கிய ஹோட்டல்

அமெரிக்காவில் இருக்கும் பிரபல ஹோட்டல் ஒன்று கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 80,000 பேருக்கு இலவசமாக உணவு வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனின் வெள்ளை மாளிகைக்கு அருகில் சாகினா ஹலால் கிரில் என்ற உணவகம் உள்ளது.

இந்த உணவகத்தை பார்த்தால், மற்ற உணவகங்கள் போன்று தான் இருக்கும். ஆனால் இந்த உணவகத்திற்கும், மற்ற உணவகத்திற்கு ஒரு வித்தியாசம் உண்டு.

யாரு பசி என்று வந்தாலும், அவர்களிடம் பணம் இல்லை என்றாலும் கூட, அவர்களுக்கு வயிறாற இந்த உணவகம் உணவளித்து வருகிறது.

கடந்த 5 ஆண்டில் மட்டும், இந்த உணவகம் சுமார் 80,000 பேருக்கு இலவச உணவு வழங்கியுள்ளது.

இது குறித்து உணவகத்தின் உரிமையாளர் காஸி மன்னான் கூறுகையில், கடந்த 2013-ஆம் ஆண்டு இந்த உணவகம் துவங்கப்பட்டதில் இருந்தே, இந்த கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது.

யாராவது, தனக்கு சாப்பிட ஏதாவது வேண்டும் என்று கேட்டார்கள் என்றால், அவர்களுக்கு இங்கு அது கொடுக்கப்படும்
உங்களால் காசு கொடுத்து சாப்பிட முடியாது என்றால், எங்கள் உணவகத்துக்கு வந்து சாப்பிட்டுக் கொள்ளலாம். 

காசு கொடுத்து சாப்பிடுபவர்களுடன் சேர்ந்து நீங்களும் உணவை சுவைக்கலாம்.

தனது குழந்தைப் பருவத்தில் பட்ட கஷ்டம்தான், இந்த முடிவுக்குக் காரணம் எனவும் பாகிஸ்தானில் இருக்கும் ஒரு குக்கிராமத்தில் வளர்ந்த நான் அங்கு உணவில்லாமல் மிகவும் வறுமையில் வாழ்ந்துள்ளேன்.

வீடு வசதியற்ற பலர், குப்பைத் தொட்டிகளில் உணவு ஏதேனும் கிடைக்குமா என்று தேடுவதை நான் பார்த்திருக்கிறேன். 

அதைப் பார்த்த அடுத்த கணம், எனது சொந்த கதை நியாபகம் வரும், அதன் காரணமாகவே இப்படி ஒரு முடிவு என்று கூறியுள்ளார்.

மேலும் காஸியின் தற்போதைய ஒரே இலக்கு, ஆண்டுக்கு 16,000 பேருக்கு இலவச உணவு அளிக்க வேண்டும் என்பதுதான் என்று கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்.


Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment