கிணற்றில் சடலமாக மிதந்த புதுப்பெண்

தமிழகத்தில் திருமணமான ஒராண்டாண்டில் புதுப்பெண் கிணற்றில் சடலமாக கிடந்த நிலையில் அவர் எழுதியிருந்த கடிதத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மனைவி சங்கீதா.
இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டுகளே ஆன நிலையில், வீரபுத்திரன் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்துள்ளார்
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகாரறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த சில மாதங்களாக வீரபத்திரன் மது அருந்தி வீட்டுக்கு வந்து சங்கீதாவிடம், அடிக்கடி நகை, பணம், மற்றும் டூவிலர் வாங்கி வருமாறு அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று முன்தினம் வீரபத்திரன் குடித்துவிட்டு வந்து சங்கீதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே நேற்று வீட்டின் அருகே உள்ள வீரபத்திரனுக்கு சொந்தமான விவசாய கிணற்றில் சங்கீதா சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டதோடு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் மீட்டனர்.
அதில், நான் என் கணவர் குடித்தார் என்பதற்காக தான் செய்தேன், என் கணவர் தான் இதற்கெல்லாம் காரணம் என்றும் தனது கணவரின் ஊர் பெயர் மற்றும் அவரின் நகைகள் கணவரிடம் இருப்பதாகவும் எழுதியிருந்தது.
இதனிடையில் சங்கீதாவின் கணவர் வீரபத்திரனை கைது செய்து, சங்கீதா கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என இரு கோணங்களில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment