இஸ்லாமிய கல்விக் கூடங்களான மதரஸாக்களை கல்வியமைச்சின் கண்காணிப்பில் கொண்டு வரப்படும் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அமைச்சரவை அந்தஸ்துள்ள இஸ்லாமிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் ஷரிஆ பல்கலைக்கழகம் அமைக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரம் எங்கள் கையில் கிடையாது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இயங்கிவரும் மட்டக்களப்பு ஷரிஆ பல்கலைக்கழத்துக்கு இனி மட்டக்களப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை விசாரித்த உண்மை கண்டறியும் குழு அரசுக்கு இதற்கான பரிந்துரையை முன்வைத்தது.
எனவே, பட்டப்படிப்புக்கான பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே இனி அனுமதி அளிக்கும் வகையில் கல்வித்துறையில் சட்டத்திருத்தம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment